இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என உத்தரவாதமுள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவிப்பு
இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் என பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயற்படவும் வலுவாக கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது. இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து சனிக்கிழமை (5) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இணக்கம் காணப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றமென பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயல்பட முடிகிறது. எனவே இருநாட்டு தலைவர்களின் பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். இருதலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரம் அல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்படமாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.
இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவே கூட்டு இணக்கப்பாடுகளுடன் ஒரு குடைக்கு கீழான பாதுகாப்பு ஒப்பந்த வரைபு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையானதும் ஸ்தீரமானதுமான புரிந்துணர்வு ஒப்பந்தமாகவே இது உள்ளது. இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பாதுகாப்பு படைகளின் செயற்திறன் மேம்படுத்தல் மற்றும் கூட்டு பயிற்சி நடவடிக்கள், பரிமாற்றங்கள் என்று இருதரப்ப பாதுகாப்பு ஒத்துழைப்புகள் புதிய வடிவில் வலுசேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மீனவர் பிரச்சினை
இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை – இந்திய தலைவர்கள் முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாளவும் தீர்வு காணவும் வேண்டும் என்ற விடயத்தை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தரிப்பிடம் வலியுறுத்தியிருந்தார். இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்து விடாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும் என்பது நிலைப்பாடாக உள்ளது. இருப்பினும் மீனவர் பிரச்சினையில் அண்மைய நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மீனவர்களை இலங்கை விடுவித்திருந்தது. எனவே சிறந்த ஒத்துழைப்புகளுடன் இருதரப்பினராலும் மீனவர் பிரச்சினை கையாளப்படுகின்றது. கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் ஆகுகையில் 6 சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகளை தவிர்த்து மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண தொடர்ந்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply