அநுராதபுரம் விமான நிலையத்துக்கு ஒருநாள் சர்வதேச தர அந்தஸ்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான தமது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வசதியாக, அநுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்தை சர்வதேச விமான நிலையமாக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பையடுத்து, இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அநுராதபுர இராணுவ விமான நிலையத்திற்கு ஒரு நாள் சர்வதேச விமான நிலைய அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

விசேட அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட அநுராதபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளும் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்திய பிரதமரும் அவரது முக்கிய பாதுகாப்புக் குழுவினரும் இந்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு பயணம் செய்தனர்.

இவ்வாறான விமான நிலையங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக சர்வதேச விமான நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே சர்வதேச விமான நிலையங்களாக செயற்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply