நாட்டின் மொத்த சனத்தொகை 21,763,170 பேர் என கணிப்பு

நாட்டின் மொத்த சனத்தொகை தற்போது 21,763,170 பேர் என குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட குடிசன மதிப்பீட்டு அறிக்கையின்படி அப்போது காணப்பட்ட எண்ணிக்கையை விட இம்முறை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 1,403,731 அதிகரிப்பு காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலத்திற்குள் சனத்தொகை வருடாந்த அதிகரிப்பு வீதம் நூற்றுக்கு 0.5 வீதமாகவே காணப்பட்டதாகவும் குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் அதிகரித்த சனத்தொகை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இது நூற்றுக்கு 28.1 வீதமாகும். ஆகக் குறைந்த சனத்தொகையை கொண்ட மாகாணமாக 5.3 வீதம் வட மாகாணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகூடிய சனத்தொகை பதிவாகியுள்ளது. அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 2,433,685 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 பேரும் வாழ்ந்து வருவதாக குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கையின்படியே இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குடிசன மதிப்பீட்டு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply