ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம்

உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம் ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக மரத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.

இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையம் ஆகும்.

அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் சீமெந்தால் நிர்மாணிக்கப்படும் கொங்கிறீட் கட்டடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முப்பரிமாண ரயில் நிலையம் எதிர்வரும் ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்படும் என ஜப்பான் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply