இந்தியா அமெரிக்கா போல் சீனா உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை

இந்தியா மற்றும் அமெரிக்காவைப் போல நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் போக்கை சீனா ஒருபோதுமே கொண்டிருக்கவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்தரல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றபோதே ரில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

பாகிஸ்தான் ஊடகமொன்றில் வெளியான செய்தியில் இலங்கையில் யுத்தத்தின்பின்னர் இராணுவ தளபதி உட்பட ஏனைய இராணுவ அதிகாகள் பதவி மாற்றம் செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பின்னணியில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது. அதே போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாட்டை பிரிக்கும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மௌனம் சாதித்து வருகின்றார். இது போன்று பல எழுத்து மூலமான ஆதாரங்களை நாட்டு மக்களுக்கும் காட்ட முடியும்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டடிருப்பதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பை கோத்தாபய ராஜபக்ச ஆபத்தான நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ரில்வின் சில்வா, இந்த உடன்படிக்கை இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply