இந்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பதவி விலகினார்

மும்பையில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் உட்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அமைச்சர் சிவராஜ் பட்டீல் அறிவித்துள்ளார்.
 
அமைச்சர் தனது இராஜினாமாக் கடிதத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களுக்குள் அமைச்சர் பட்டீல் மாட்டியிருந்தார்.

தேர்தல் நடைபெறவிருக்கும் சமயத்தில் இந்தியாவுக்கு நடந்திருக்கும் தாக்குதலுக்கு தமது கட்சி பொறுப்புக் கூறவேண்டுமென நேற்று சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரசின் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்தே தனது இராஜினாமாக் கடிதத்தை உட்துறை அமைச்சர், பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர்மட்டக் கூட்டத்துக்கு அமைச்சர் பட்டீல் அழைக்கப்படவில்லையெனவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் சிவராஜ் பட்டீல் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மும்பையில் ஆயுததாரிகள் நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஞாயிற்றிக்கிழமை சர்வகட்சிக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply