முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி இன்று இரவு ரூபவாகினியில் விளக்க உரை
சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக் இன்று புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியின் குற்றச்சாட்டினை அடுத்து சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று விளக்கமளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இதனையடுத்து அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடனடி நடவடிக்கையாக இன்று ஜனாதிபதி மகிந்த நாட்டுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஒழுங்கினை ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று இரவு ரூபவாகினியில் ஜனாதிபதி மகிந்தவின் விளக்க உரை இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply