ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றும் 10 தினங்களுக்குள் வெளியிடப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
மஹிந்த சிந்தனையின் இரண்டாம் கட்டமாக நாட்டின் பாரிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாகவே இத்தேர்தல் விஞ்ஞாபனம் அமையும்.
இதுவரையில் அரசாங்கத்தால் ஆரம்பித்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புறம்பாக புதிய பாரிய திட்டங்கள் இந்த விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் கூடுதலான வேலை வாய்ப்புக்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply