வடக்கின் வசந்தத்திற்கு சீனா 2352 மில்லியன் ரூபா பெறுமதியான உதவி
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள், மீள்குடியேற்றம், போக்குவரத்து, விவசாயம் போன்றவற்றை துரிதப்படுத்தும் நோக்கில் தேச நிர்மாண அமைச்சின் ஊடாக மூன்றாவது தடவையாகவும் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் நேற்று சீன தூதுவரினால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.
வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம் சீன தூதுவர் யங் ஷியூபிங் கையளித்தார்.
2352 மில்லியன் ரூபா செலவில் தருவிக்கப்பட்டுள்ள மேற்படி இயந்திராதிகள் பெருந்தெருக்கள் அமைச்சின் செலாளர் அட்மிரல் கரண்ணகொடவிடம் கையளிக்கப்பட்டன. 46 பெக்கோ லோடர்கள், 04 கார்கோ டிரக்குடன் கூடிய லோடிங் கிரேன்கள், 12 பாம் டிராக்டர்கள், 09 பிடு மென்ட் ஸ்பிரேய்ர்ஸ், 01 டெகாடிங் பிளா ண்ட், 02 சிப் சீலர், 09 பிடுமின் பெளசர்கள் (சூடாக்கும் வசதியுடன்) என்பன சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு காலி முகத்திடலுக்கு முன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை கையளிக்கும் வைபவத்தில் பசில் ராஜபக்ஷ எம்.பி. இராணுவத் தளபதி, சீன தூதுவர், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலர், தேச நிர்மாண அமைச்சின் செயலர், மீள்குடியேற்ற அமைச்சி செயலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply