சரத் பொன்சேகாவிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த ‘சுய தொழில் புரிவோருக்கான சம்மேளனம்’ பேரணியாகச் சென்று ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வெற்றி பெற்ற நாட்டை காட்டிக் கொடுக்க ஜெனரல் பொன்சேக்காவிற்கு வெட்கம் இல்லையா, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெட்கம் இல்லையா போன்ற பாதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இராணுவத்தை காட்டிக்கொடுத்த பொன்சேக்கா, தேசத்துரோகி பொன்சேக்கா, நாட்டை சர்வதேச சக்திகளுக்கு காட்டிக்கொடுக்கும் பொன்சேக்கா என ஆர்ப்பாட்டக்கார்கள் கோஷங்களை எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply