வவுனியாவில் பரவும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட திட்டம்; பதினைந்து வைத்திய நிபுணர்கள், நாற்பது தாதிகள் அனுப்பி வைப்பு
வவுனியா ஆஸ்பத்திரியில் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்குடன் தனியான வார்ட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து 40 தாதியர்கள், 159 டாக்டர்கள், 2 மருத்துவ நிபுணத்துவ ஆலோசகர்கள் மற்றும் நடமாடும் ஆய்வுகூடம் என்பன உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 17 பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதுடன் 700 பேர் டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
வவுனியாவில் டெங்கு நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சுடனும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுடன் உடனடியாக தொடர்பு கொண்டதன் பலனாகவே இந்த உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வவுனியா நகர் பகுதியை துப்புரவு செய்வதற்காக அரச அதிபர் அலுவலகம் உடனடியாக 5 இலட்சம் ரூபாவை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கியுள்ளது டன் தெளி கருவிகள், தடுப்பு மருந்துகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து 15 தெளிகருவிகள், தெளிகருவிகள் இயக்குவதற்கான 15 தொழிலாளர்களும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply