அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்த குழுக்களை மக்கள் ஏற்கார்

அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்த குழுக்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சனச உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கொழும்பை மட்டும் மையப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை, தமது அரசாங்கம் கிராமங்கள் நோக்கி வியாபித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அபிவிருத்தி இலக்குகள் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலேயே பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமும், அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலகின் வலுவான வங்கிகள் பாதிக்கப்பட்ட போதிலும், இலங்கைப் பொருளாதாரத்தை பாதுகாக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply