இந்தியா உட்பட வெளிநாடுகளின் தலையீடின்றிய அரசியல் தீர்வுத் திட்டம்; விரிவான பேச்சுக்களின் பின் பொன்சேகா – சம்பந்தர் இணக்கம்

இந்தியா உட்பட வெளிநாடுகளின் தலையீடின்றி இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து பொன்சேகா – சம்பந்தர் இணக்கம் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் மேற்குல நாடுகளின் தலையீடு இன்றி தமிழர் பிரச்சினைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் அரசியல் தீர்வு வரைவு குறித்து பேசுவது என்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் இன்று நடத்திய பேச்சுக்களின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் கண்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றும் இன்றும் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுகள் நடைபெற்றன.

இந்தப் பேச்சுகளில் ஜெனரல் பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் எதிரணித் தரப்பில் பங்குபற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் இப்பேச்சுகளில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply