தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ராஜினாமா
மும்பை தீவிரவாத தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, அச்சம்பவத்துக்கு தானும் தார்மீக பொறுப்பேற்று பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இலாக்கா மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.
இதேபோல் மகராஷ்டிரா மாநில முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக்கும், மும்பை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிவராஜ் பாட்டீல் வகித்து வந்த உள்துறை இலாக்கா, நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிதம்பரத்திடம் உள்ள நிதித்துறை இலாக்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இலங்கையின் பிரச்சினையில் புலிகளுக் கெதிரான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டவராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கருதப்பட்டு வந்தவர். இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தலைமையிலான ஆட்சியில் அதி முக்கியமானவராகக் கருதப்பட்ட இவரது ராஜினாமா இந்திய அரசியலிலும் அயலுறவுகள் தொடர்பான நிலைப்பாடுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது எனக் கருதப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply