இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க முடிவு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது நிலைப்பாடுகள் தொடர்பாக குழப்பகரமான சூழல்கள் தொடர்கின்ற நிலையில் அதில் அங்கத்துவம் வகிக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவெடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உயர் மட்ட மாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார். நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பகிஸ்கரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை அறிவிக்கும் வரை ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களை வெளியிடாது பேணவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தல் தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்தும் போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற கருத்தை முன்வைக்க தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply