இலங்கை திரும்பும் தமிழக அகதிகள்

கால்நூற்றாண்டு நீடித்த யுத்தத்தால் இலங்கையிலிருந்து அகதிகளாக சென்று தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தற்போது இலங்கையில் போர் முடிந்து சகஜ நிலையிலுள்ளதால் தங்களது சொந்தங்கள் மற்றும் சொத்துக்களின் நிலைகளை அறிய ஆர்வம் காட்டிவருவதாக தமிழ் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் குறித்து கியூப்பிரிவுப் பொலிஸார் விசாரணை செய்த பின், மாவட்ட எஸ்.பி. அலுவலகத் திலிருந்து, அகதிகள் இலங்கை செல்ல எவ்வித ஆட்சேபனையும் இல்லை என சான்று கொடுத்த பின் அகதிகளுக்கு கடவுச்சீட்டை வழங்குகின்றனர்.

அந்தவகையில், கடந்த சில வாரங்களில் பத்துக் குடும்பங்கள் திருகோணமலைக்குத் திரும்பியியுள்ளனர்.

அதேவேளை, மேலும் பெருமளவானோர் தமிழகத்தில் இருந்து சொந்த இடங்களுக்குத் திரும்ப விண்ணப்பித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பெருமளவானோர் தமிழகத்தில் இருந்து சொந்த இடங்களுக்குத் திரும்ப பலர் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டு முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் மீளத் திரும்புவதில் சிக்கலான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், சிலர் கடல் வழியாகத் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இந்திய அரசின் அனுமதியின்றி, படகுகள் மூலம் திரும்பிய ஆறு அகதிகள் கடந்தவாரம் நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள சிறிய தீவு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply