முன்னாள் சிறுவர் போராளிகள் விடுதலை
புனர் வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் போராளிகளை அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும், முதல் கட்டமாக 35 சிறுவர் போராளிகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக புனர்வாழ்வு முகாம்களில் உள்ள இந்த சிறுவர் போராளிகளின் பின்னணி பற்றி ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் குறைந்தளவு தொடர்புகளை வைத்திருந்த இந்தச் சிறுவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கை முழுமையாகப் பூர்த்தியடைந்த பின்னரே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார்.
“இந்தச் சிறுவர்களை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய பின்னரே அவர்களின் பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைக்கவுள்ளோம். இதில் பெற்றோரை இழந்த சிறுவர்களும் அடங்குவர். அவர்களையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நீதிவான் முன்னிலையில் வைத்து ஒப்படைக்கவுள்ளோம்.” எனப் புனர் வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply