“வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் தேவாலய வீதியை திருத்தித் தருமாறு அப்பிரதேச பொதுமக்கள் கோரிக்கை முன்வைப்பு

மாவடி – மூளாய் வீதியிலிருந்து காளி கோவிலுக்கு முன்பாக பத்தானைக்கேணி வைரவர் ஆலயம் நோக்கிச் செல்லும் தேவாலய வீதி மக்கள் நடமாட முடியாதவாறு பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த இவ்வீதி மழை காலத்தைத் தொடர்ந்து மேலும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் சைக்கிள்களில் பயணம் செய்பவர்களும் நடந்து செல்பவர்களும் கடும் சிரமங்களுக்கு மத்தியிலேயே பயணம் செய்து வருகின்றனர். வட்டுக்கோட்டை சங்கரத்தை மாவடி மற்றும் அராலிப் பகுதியில் இருந்து பொன்னாலை தொல்புரம் மூளாய் சுழிபுரம் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்வோர் தூரத்தைக் குறைப்பதற்காக இலகு குறுக்கு வழியான இப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இப்பகுதியில் இருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மற்றும் வட்டு மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் இவ்வீதியையே பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

வீதியின் சீரற்ற நிலையால் இவர்கள் பெரும் சிரமங்களையும் அனுபவித்து வரு கின்றனர். மாணவர்கள் மட்டுமன்றி கட்டடத் தொழிலாளர்கள்த கடற்றொழிலாளர்கள்த விவசாயிகள்த பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் ஒன்றாக இவ்வீதி அமைந்துள்ளது.

தற்போது யாழ்.குடாநாட்டில் “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் பல வீதிகள் அபி விருத்தி செய்யப்பட்டு வருகின்றன. எனவே இத்திட்டத்தின் கீழ் இவ்வீதியையும் செப்ப னிட்டு பொதுப் போக்குவரத்திற்கு வழி சமைக்க சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply