புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின்; பயங்கரவாத இயக்கப் பட்டியலில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பெயரும் சேர்க்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு அமெரிக்காவில் உடனடித் தடை கொண்டு வரப்பட்டது.

2003 ஆம் ஆண்டு முதல் மீண்டும் 5 வருடங்களுக்கு இந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை இந்த வருடத்துடன் நிறைவு பெறுவதால் மீண்டும் 5 வருடங்களுக்கு விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply