அரசசார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியலில் தலையீடுகளை மேற்கொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான புதிய சட்டங்கள் அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள ரகசிய அறிக்கையொன்றில் 24 அரசசார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில அரசசார்பற்ற நிறுவனங்கள் நிவாரணப் பணியொன்ற போர்வையில் முன்னாள் இராணுவ ஆலோசர்களை இலங்கைக்கு வரவழைத்து அவர்களை வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்தின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்:டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு எவ்வாறு பணம் செலவிடப்படுகிறது போன்ற தகவல்களை வழங்குவது கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை 230க்கும் மேற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகினறன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply