பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம்
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் முழுக்காரணம் என்பது உறுதியாக தெரிய வந்தால், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளின் பேச்சை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால், அமெரிக்க உளவுப் பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாதான் மும்பை தாக்குதலுக்குக் காரணமாக இருக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
லஷ்கர் அமைப்புக்குத்தான் கடல் மார்க்கமாக ஊடுறுவும் திறமை உள்ளது. மும்பையில் நடந்த திட்டமிட்ட தாக்குதலைப் பார்க்கும்போது லஷ்கர் அமைப்புதான் இதைச் செய்திருக்க முடியும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியுள்ள தீவிரவாதி கொடுத்துள்ள தகவல்களும் இதை நம்புவதற்கு போதுமான சாட்சியமாக உள்ளது.
மேலும் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் இந்திய செல்போன்களையும், சாட்டிலைட் போன்களையும் பயன்படுத்தவில்லை. பாகிஸ்தானிலிருந்துதான் அவர்களுக்கு போன்கள் வந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் இதுதொடர்பான வலுவான ஆதாரங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தால், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
காஷ்மீர் எல்லையையொட்டி உள்ள இந்த முகாம்கள் குறித்து பாகிஸ்தான் அரசு இதுவரை கண்டும் காணாமலும் உள்ளது என்று அவர் கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply