யாழ்ப்பாண கடலில் தமிழக மீனவர்கள் அத்துமீறல்
யாழ்ப்பாண கடல் வலயத்தில் மீன்பிடித் தடை நீக்கப்பட்டாலும் கூட அதன் பயன்களை அங்குள்ள சுமார் 20 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் அனுபவிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாள்தோறும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிகளே காரணம் எனக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாண மீன்பிடி கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் டி. தவரட்ணம், இந்த நிலை தொடருமாக இருந்தால் இன்னும் சில வருடங்களில் மீன்பிடியே இல்லாது போய் விடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்துப்படி தற்போது யாழ்ப்பாண நகரில் இருந்து ஐந்து கிலோமீற்றர் பகுதியிலும் மண்டைதீவு, பாலதீவு மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய இடங்களிலும் இந்திய மீனவர்கள் தமது நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதே வேளை இந்திய மீன்பிடிப் படகுகளினால், யாழ்ப்பாண மீனவர்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக மீன்பிடித் துறை அமைச்சின் யாழ்ப்பாண அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply