மஹிந்த: 62.53% ; சரத்: 29.12% – களனி பல்கலைக்கழக கருத்துக் கணிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவினால் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 62.53 வீத வாக்குகளும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு 29.12 வீத வாக்குகளும் கிடைக்கப் பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் நாட்டின் மிகவும் பிரபல்யமான அரசியல்வாதியாக தொடர்ந்தும் ஜனாதிபதி விளங்கி வருவதாக சமூக விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த கலாநிதி கே. கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர் எல்லை உள்ளிட்ட நகர்ப் புறங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அதிக வரவேற்பு காணப்படுவதாகவும், கிராமப் புறங்களில் ஜனாதிபதிக்கு அதிக வரவேற்பு காணப்படுவதாகவும் கருத்துக் கணிப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எதிர்வரும் 26ம் திகதி வரையில் இந்தக் கருத்துக் கணிப்புக்கள் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply