மலையகத்தில் 40 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணம்
மலையகத்தில் 40 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 12,230 வீடுகள் அமைக்கப் பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
தோட்டங்களில் ஒரு வீடு கூட அமைக்கவில்லை என்று உண்மை தெரியாமல் சிலர் மேடைகளில் கருத்துத் தெரிவிப்பதாக பிரதியமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
இ. தொ. கா.வுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக மேடையேறும் சிலர் அப்பட்டமான பொய்யைக் கூறுவதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். மலையகத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் நாலாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 12,230 நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு வீடுகள் வீட்டைத்தானும் நிர்மாணிக்கவில்லையென்று சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் என்று பிரதியமைச்சர் கூறினார்.
மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மலையகத்தில் வருடாந்தம் ஐயாயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதியொதுக்கப்படு கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 3,179 ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 500 தொடர்பாளர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நியமனம் செய்யப்படவுள்ளது. வரலாற்றில் முதற் தடவையாக 300 தபால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 100 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த நன்மை கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸே மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள் ளது. எனவே, இந்தத் தேர்தலில் இ. தொ. கா.வின் முடிவின்படி மலையக மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பிரதியமைச்சர் சிவலிங்கம் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply