உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு மாற்று ஏற்பாடு

நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகமில்லாத வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு சென்று மீள்குடியமர பொருத்தமான இராணுவ பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இன்று காலை பலாலி வந்தடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாட்டில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சில சந்திப்புகளின் பின் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த தொடர் காவலரண்கள் அகற்றும் பணிகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலிகாமம்-வடக்கு பிரதேசங்கள், பளை, தனங்கிளப்பு, அரியாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர் காவலரண்களை உடைத்து அகற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான பாரிய இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply