456 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு; தேர்தல் சட்டத்தை மீறிய 187 பேர் கைது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலும் 456 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளையில், தேர்தல் சட்டங்களை மீறிய 187 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறுதல் தொடர்பில் இதுவரையில் 456 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதில் ஜே.வி.பி 114 முறைப்பாடுகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 103 முறைப்பாடுகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 79 முறைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் தேர்தல் தொடர்பான கட்டவுட்கள் மற்றும் போஸ்டர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரையிலும் அவற்றை அகற்றுவதற்கான எதுவித நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுக்காமல் உள்ளனர். எனவே, தேர்தல் விதிமுறைகளை இவ்வாறு மீறுவோரை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையாளருக்கு உள்ள அதிகாரங்களை அவர் பிரயோகிக்க வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply