தேர்தல் விதிகள் மதிப்பளிக்கப்படாவிடின் பணியை விட்டு விலகுவேன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்ட ஒழுங்கு விதிகளை அரசியல் கட்சிகள் தொடர்ந்து மதிக்காது விட்டால் தான் பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென இலங்கை தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து குறிப்பாக தென்னிலங்கையில் அதிக வன்முறைகள் உருவாகி உள்ளன. இதுவரை 400 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று அரசியல் கட்சிகளை சந்தித்த தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகள் தனது பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தவறினால் தான் பதவியை விட்டு விலகத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டவிதிகள் உதாசீனம் செய்ப்படுவது குறித்து தான் அதிக வேதனையும், கவலையும் அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் ஆணையாளரின் நிபந்தனைகளை தாம் மதித்து நடப்பதாக அனைத்து அரசியல் கட்சிகள் உறுதிமொழிகளை வழங்கியதை தொடர்ந்து திஸாநாயக்கா தனது பணிகளை தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply