பொங்கல் திருநாளில் சமாதானம், சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்பட பிரார்த்திப்போம் : ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு எம்மிடையே சமாதானமும் சுபீட்சமும் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்பட பிரார்த்திப்போம்.

இது எமது சமூகத்தின் பன்மைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங்கிலும் பரந்துவாழும் தமது இந்து சகோதரர்களுடன் சேர்ந்து இலங்கையின் பிரபலமான இந்துப் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இவ் வேளையில் சுமார் மூன்று தசாப்தங்களாக அவர்களின் பெரும்பாலானவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை அனுபவிக்கக்கிடைத்திருப்பது அவர்களது மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகிறது.

இந்துக்களின் பஞ்சாங்கத்தில் மிக விசேடமான ஒரு பண்டிகையான தைப்பொங்கல் மரபுகளையும் கிரியைகளையும் இந்துக்கள் தொடர்ந்தும் அனுஷ்டித்து வருகின்றனர். இரண்டு வகையில் புனிதமாகக் கருதப்படும் இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடினஉழைப்புக்குப் பின்னர் பெற்ற அறுவடைகளுக்காகவும் அதை அளித்த சூரியபகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இன்றைய தைப்பொங்கல் தினத்தில் எமது இந்து சகோதரர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கைத்தரும் எதிர்பார்ப்புகளை வைப்பதற்கும் வென்றெடுக்கப்பட்டுள்ள சமாதானத்திற்காக நன்றி செலுத்தவும் தங்களது குழந்தைகளுக்குப் போன்றே முழு இலங்கையர்களுக்கும் புதியதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காகவும்; நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு எம்மிடையே சமாதானமும் சுபீட்சமும் நல்ல நம்பிக்கையும் புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply