அரியாலை மற்றும் தென்மராட்சியில் உயர்பாதுகாப்பு வலயம் நீக்கம்

தென்மராட்சி கிழக்கு மற்றும் யாழ். நகர் கிழக்கு, அரியாலை, கொழும்புத்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் நேற்று மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் தலைமையில் தமது பிரதேசத்திற்குள் நேற்றுப் பிரவேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டனர். அப்பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

ஏ-9 வீதி வழியாகவும் யாழ். கேரதீவு வீதி வழியாகவும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா முன்செல்ல அவரைத் தொடர்ந்து பின்னால் சென்று அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர்.

இச்சமயம் வீதியில் அமைக்கப் பட்டிருந்த அனைத்து தடைகளும் அகற்றப்பட்டிருந்தது. சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள்கள் வைத்திருந் தோர் அந்தந்த வண்டிகளிலேயே உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர். உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கலாம் என்ற செய்தி வெகுவேகமாக பரவத் தொடங்கியதும் மேலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சென்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply