தங்கல்லை மற்றும் பொலன்னறுவை சம்பவங்களுக்கு அரசு கண்டனம்
பொலன்னறுவையில் ஆளும்-எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் மற்றும் தங்கல்லையில் ஒரு பெண் மரணத்துக்கு காரணமான துப்பாக்கி சூட்டு சம்பவம் போன்றவற்றை அரசாங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது. பொலன்னறுவையில் இரு கட்சி ஆதரவாளர்களுகிடையில் நிகழ்ந்த மோதலில் சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“வரலாற்று முக்கியத்துவம்மிக்க தேர்தல் நடைபெறவுள்ள இத்தருணத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தங்கல்லையில் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊடக மற்றும் ஏனைய தகவல்களுடன் ஒப்பிடும்போது தங்கல்லை சம்பவத்தில் மரணமான பெண் ஜனாதிபதி ஆதரவாளர் என்பது புலனாகியுள்ளது. அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட சம்பவமா அல்லது உண்மையாக தேர்தலுடன் தொடர்புடையதா என்பது பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
“பொதுமக்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரத்துக்கும் கலந்துகொள்ளும் சுதந்திரம் உண்டு.” இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply