செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துக
இலங்கை ஊடகத்துறை மீது அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக நியூயோர்க்கை தளமாக கொண்டிருக்கும் `பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழு` அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல தரப்புகளும் பிரசாரம் மற்றும் வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களின் பங்களிப்பு மதிப்பளிக்கப்பட வேண்டுமென்று குரல்கொடுத்துள்ளது சி.பி.ஜே (CPJ : Committee to Protect Journalists).
இரு நாட்களின் முன்னர் பொலனறுவையில் நடந்த தாக்குதலில் பி.பி.சி சிங்கள சேவையின் நிருபர் தக்ஷீலா புல்முக்லி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழுவின் ஆசியாவுக்கான நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பொப் டியற்ஸ் “தக்ஷீலா மீதான தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடமும் எதிர்கட்சிகளின் தேர்தல் பேரணி ஏற்பாட்டாளர்களையும் கோருகின்றோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளின் பிரகாரம் நூற்றுக்கணக்கான தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடக சுதந்திரத்திற்கான அமைப்புகள் பத்திரிகையாளரைப் பாதுகாக்கும் குழுவுக்குக் கூறியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply