கிராம மக்களின் வெற்றியே நாட்டின் வெற்றியாகும்: கிழக்கில் மஹிந்த
கடந்த காலத்தைப் படிப்பினைய கக் கொண்டு நாட்டு மக்கள் தமது எதிர்கால பயணத்தைத் தீர்மானித்து விட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் 26ம் திகதி மக்கள் அத்தீர்மானத்தை வெளியிடுவர் எனவும் நாடு துண்டாடப்படுவதற்கு மக்கள் இனி ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் எனவும் கிராம மக்களின் வெற்றியே நாட்டின் வெற்றியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்பாறை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் திருமதி பேரியல் அஷ்ரப் ஏ. எல். எம். அதாவுல்லா, பி. தயாரத்ன, ஜகத்புஷ்பகுமார, ஜோன்சன் பெர்னாண்டோ, வீமல் வீரவன்ச எம். பி. உட்பட மாகாண அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பல ரும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-
அம்பாறை நகரில் திரண்டுள்ள இலட்சக் கணக்கான மக்களைப் பார்க்கும் போது எமது வெற்றி துல்லியமாகிறது. எமது வெற்றி நாட்டின் வெற்றி, கிராமிய மக்களின் வெற்றி என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
பிளவுபட்டிருந்த நாடு ஒன்றிணைக்கப்பட்டு அச்சமற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் மட்டுமன்றி நாட்டின் எப் பிரதேசத்திலும் எந்த நேரத்திலும் மக்கள் பயமின்றி சென்று வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கட்டியெழுப்பப்பட்டுள்ள நாடும் மீள பின்னடைய இடமளிக்க முடி யாது. நாம் கடந்த நான்கு வருட காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். பின்னடைவு கண்டுள்ள பிரதேசங்களை மேம்படுத்தி முழு நாட்டையும் அபிவிருத்தியில் இட்டுச் செல்வதே எமது எதிர்கால நோக்கம். அதனை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றுவோம்.
அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்ப நாட்டு மக்களின் சுபீட்சமான வாழ்க்கைக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத் தவுள்ளோம். அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். கிராமிய மக்களுக்கான சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதுடன் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் உட்பட எதிர்காலத்திற்கான சகலதையும் நிறைவேற்றுவோம்.
நாடளாவிய ரீதியில் பாதைகள், பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. புற நகர்களிலிருந்து கொழும்புக்குப் போகும் பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் விமான நிலையம் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
மஹிந்த சிந்தனையின் இரண்டாவது அத்தியாயத்தை நாம் மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். உலகின் முன்னிலையில் எமது தாய்நாட்டை முன்னணி நாடாக நிலைநிறுத்துவதே எமது எதிர்பார்ப்பு.
கடந்த காலத்தைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரும் இந்நடவடிக்கை யில் நாம் கைகோர்த்துச் செயற்படுவோம். மக்களின் பூரண ஆதரவு அதற்கு அவசியம்.
எதிர்வரும் 26ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற் றுவோம். வெற்றிலையின் சின்னம் வெற்றியின் சின்னம். நாட்டு மக்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் சின்னம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இத் தேர்தல் பிரசார மேடையில் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் காத்தமுத்து கணேசன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு ஜனாதிபதிக் குத் தமது ஆதரவை வழங்க உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply