இந்தியா போல் அமெரிக்காவும் ஜனாதிபதி தேர்தலில் நடுநிலைமை
` பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை` எனும் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கு அமைய, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா நடுநிலைமையாக இருக்குமென்பதை டில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு சிரேஷ்ட எம்.பி.க்கள் குழுவினரை சந்தித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் தெளிவுபடுத்தி உள்ளார்.
இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் திருகோணமலை மாவட்ட எம்.பி. இரா. சம்பந்தன், யாழ். மாவட்ட எம்.பிகளான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அதேவேளை இன்று, இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகமும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்கா நடுநிலைமையை தொடர்ந்து பேணுவதாகவும் குறிப்பிட்ட அணிக்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக வெளிவரும் செய்திகளுக்கு மறுப்பையும் கடுமையான கண்டனத்தையும் தெரிவிப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் எவருடனும் அமெரிக்கா நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணும் எனும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தரின் முடிவை ஆதரப்பதாக யாழ். நாளிதழ் ஒன்று திட்டமிட்டு புரளியை கிளப்பி வருவதாக கூட்டமைப்பு எடுத்து முடிவை ஏற்றுக்கொள்ளாத கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் `ரெலோ நியூஸ்`க்கு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply