`நாமல் ராஜபக்‌ஷவின் லண்டன் புகைப்படம்` : அம்பலமாகும் `உண்மை`

நாமல் ராஜபக்ஷ அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாமல் ராஜபக்‌ஷவும் எமில் காந்தனும் அண்மையில் லண்டனில் சந்தித்தமைக்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தனர். உண்மையில் அந்த புகைப்படம் 2006ம் ஆண்டு ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இது இன்னொரு `உண்மை`யை அம்பலமாக்கியுள்ளது.

2006ம் ஆண்டு ஏப்ரல் காலப்பகுதியில் நாமல் ராஜபக்‌ஷ லண்டனில் புலிகளின் உளவு கட்டமைப்பின்  வட்டத்துக்குள் கண்காணிப்பில் இருந்துள்ளார். எமி்ல் காந்தன் என்பவர் புலிகளின் வெளிநாட்டு உளவு வேலைகளுக்கு பொறுப்பான `கஸ்ரோ` அவர்களின் தலைமையின் கீழ் இயங்கியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply