தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கு கொள்ளாது
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சர்வகட்சிக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக தாம் அறிவித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஈ. கைலேஸ்வரராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு கட்டமைப்பு முற்றாக சீர்குலைந்துள்ளது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்ட ஒரு கட்சி என்ற ரீதியில் பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதோ சென்ற சந்தேகம் கூடத் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் கருணா அம்மான் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply