தனியார்துறை ஊழியர்களுக்கு உடனடிச் சம்பள அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உடனடியாக அதிகரிக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

விசேட கட்டளை மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 2500 ரூபாவுக்கு சமமாக தனியார் ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என தொழில் உறவுகள் மற்றும் மனித வலு அமைச்சர் அதாவுத செனவிரத்ன அனைத்து சம்பள சபைகளுக்கும் தொழில் ஆணையாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பள அதிகரிப்பை முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள அனைத்து தொழிற்சாலை ஊழியர்களுக்கும் வழங்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தேயிலை, ரப்பர் தோட்டத்துறை தொழிற் சங்கங்கள் மற்றம் இலங்கை தொழில் வழங்குவோர் சம்மேளனத்திற்கிடையிலான கூட்டு ஒப்பந்தத்திலுள்ள நாளாந்த சம்பளம் 405 ரூபாவை 2010 ஜனவரி 15 ஆம் திகதியிலிருந்து ஏனைய அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கும் விதத்தில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டவாறு வழங்குமாறும் அமைச்சர் கேட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply