கருணாநிதி தலைமையில் மன்மோகன் சிங்கை சந்திப்பதில் பயனில்லை : வைகோ

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில், இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்வரும் 4ஆம் நாள் சந்திக்கவுள்ளனர். இவ்வாறு சந்திப்பதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதால், தமது கட்சியும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் எனவும் வர்ணித்துள்ளார். இதேவேளை, தமிழ்நாட்டில் அனைவரும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆதரவாக இருப்பதாகவும், அது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வைகோ கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply