ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலையில் இருப்பதாக சந்திரிக்கா அறிவிப்பு

2010 ஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருககும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக கல்கிஸ்ஸயில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கு ஆதரவளிக்காது இந்தத் தேர்தலில் நடுநிலையான ஓர் கொள்கையை பின்பற்ற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply