தேர்தலில் தோல்வியடைய நேரிடும் என்பதனை சரத் பொன்சேகா விளங்கிக்கொண்டுள்ளார்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைய நேரிடும் என்பதனை ஜெனரல் சரத் பொன்சேகா விளங்கிக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தேர்தல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட பொன்சேகா தரப்பு கூடுதல் முனைப்பு காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் மக்களை பீதிக்கு உள்ளாக்கி அதன் மூலம் சாதக பலன்களைப் பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெறவுள்ள ஆதரவினை தடுத்து நிறுவத்துவதற்கு பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டுமொரு முறை நாடு பயங்கரவாதத்தை எதிர்நோக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக உலக அரங்கில் இலங்கை ஒர் வீழ்ச்சியடைந்த இராச்சியமாக காணப்பட்டதாகவும், யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து சர்வதேச அரங்கில் இலங்கைக்கு நன்மதிப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply