22 ஆயிரம் போலி வாக்கு சீட்டுகள் புறக்கோட்டையில் கண்டுபிடிப்பு

‘அன்னம்’ சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்ட 22 ஆயிரம் போலி வாக்குச் சீட்டுக்களை பொலிஸார் கொழும்பு புறக்கோட்டை மீன் சந்தைக்கருகில் கைப்பற்றியிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண நேற்று தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புறக்கோட்டை, பொலிஸார் கடந்த 19ஆம் திகதியே இந்த போலி வாக்குச் சீட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். ‘அன்னம்’ சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்ட 22 ஆயிரம் போலி வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பெட்டியொன்றினை இருவர் தூக்கிச் சென்ற வேளை, எதேச்சையாக பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பெட்டியை சோதனையிட்ட போதே போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை புத்தளம் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்திருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

இதனைத் தவிர மேலும் 30 இலட்சம் போலி வாக்குச் சீட்டுக்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்காக அச்சடிக்கப்பட் டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்.

கைப்பற்றப்பட்டுள்ள போலி வாக்குச் சீட்டுக்கள் சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply