போருக்கு காரணமானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியே: நாமல் ராஜபக்ஷ
இந்த நாட்டில் இனக்கலவரம், தேர்தல் மோசடிகள் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. நாட்டில் போர் ஏற்படுவதற்கு காரணமானவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே. ஆனால் இன்று தாமே ஜனநாயகவாதிகள் என்று கூறிவருகின்றனர். இவ்வாறு நாளைய இளைஞர் அமைப்பின் தலைவரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ வறக்காபொலவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த நாட்டில் 30 வருடங்களாக நடைபெற்று வந்த கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வந்து இன்று அமைதி நிலவவும் சகல இனமக்களும் அச்சம் இன்றி எங்கும் சென்று வரவும் வழிவகுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. ஜனாதிபதிக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களைக் கூறிவருகின்றனர். ஊழல் மோசடி ஆட்சி என்று கூறுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 40 வருட அரசியல் அனுபவம் பெற்றவர். இந்த நாடு அவரின் சேவைகளை நன்கு அறியும் என்பதால், எந்தப் பொய்ப் பிரசாரங்களை எதிரணியினர் கூறினாலும் 26 ஆம் திகதி தேர்தலில் அவரே ஜனாதிபதியாகத் தெரிவாவார் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply