தமிழ் கைதிகளை விடுதலை செய்துவிட்டதாக போலியான தகவல்கள்

தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றவர்களையும் மற்றும் விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களையும் அரசு மன்னித்து பிணையிலோ அல்லது நிபந்தனையின் பேரிலோ விடுதலை செய்திருப்பது போன்று சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை சார்ந்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு முன்வரவேண்டும் என கலாநிதி நல்லையா குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறைக்கைதிகளின் பெற்றோர்கள் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு இப்போதுதான் உணவு கொடுத்துவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தேர்தலுக்காக அப்பாவி கைதிகளை விடுதலை செய்துவிட்டதாக போலியான தகவல்களை தெரிவிப்பது வேதனைக்குரிய விடயமாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசிய அமைப்பாளரும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வடகிழக்கு மற்றும் மலையகத்தை சார்ந்த சந்தேகக் கைதிகளின் சிலரை விடுவித்ததாக பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி மற்றும் பிரதி அமைச்சர் பொ. இராதாகிருஸ்ணன் ஆகியோர் ஊடகங்கள் வழியாக தெரிவித்திருக்கும் கருத்து முற்றிலும் பிழையானது.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கு முகமாக தமிழ் பிரதி அமைச்சர்களே இவ்வாரான போலி பிரசாரங்ளை மேற்கொள்வது என்பது படு மோசமான செயலாகும். சட்டமா அதிபர் தடுத்துவைக்கப்பட்டுள்ள 600 சிறைக்கைதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனாலும் இவர்களுக்கு இன்னும் விடுதலை வழங்கப்படவில்லை. மேலும், தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றவர்களையும் மற்றும் விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களையும் அரசு மன்னித்து பிணையிலோ அல்லது நிபந்தனையின் பேரிலோ விடுதலை செய்திருப்பது போன்று சந்தே கைதிகளாகிய இவர்களையும் விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply