புலிகளுக்காக ஆயுதக் கொள்வனவு முயற்சி மேற்கொண்ட இரு கனடிய தமிழருக்கு அமெரிக்க நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனை
விடுதலைப் புலி இயக்கத்திற்காக ஆயுதக் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரு தமிழர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நியூயோர்க் மாநிலத்தின் கிழக்கு மாவட்ட நீதவான் ரெய்மன்ட் ஜே. டியாரியினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 வயதான சதாஜன் ஷராசந்திரன் மற்றும் 50 வயதான நடராசா யோகராஜா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஷராசந்திரனுக்கு 26 ஆண்டுகால சிறைத்தண்டனையும், யோகராஜாவிற்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுதங்களை விடுதலைப் புலிகளின் சார்பில் கொள்வனவு முயற்சி மேற்கொண்ட குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேருமே கனேடிய தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இரண்டு தமிழர்களையும் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2006ம் ஆண்டு கைது செய்திருந்தனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் அமெரிக்க இடமளிக்காது என்பதனை இந்தத் தீர்ப்பு உலக நாடுகளுக்கு வலியுறுத்தும் என சட்டத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply