கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க விசேட ஏற்பாடு
அடுத்த வாரம் செவ்வாய் கிழமை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள பொது மைதானத்தில் 67 கொத்தணி வாக்குச் சாவடிகளும் கரச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வாக்குச் சாவடிகளும் பூனகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 13 கொத்தணி வாக்குச் சாவடிகள் உட்பட 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ளாத பட்சத்தில், அவர்கள் எங்களுடைய மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கொத்தணி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேவேளை, அவர்கள் வாக்களிப்பினை மேற்கொள்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply