தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமாவை பிரதமர் ஏற்க மறுப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், மும்பை தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக தனது பதவியில் இருந்து விலகினார் என்று வெளிவந்த செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. நவ-30 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அதுகுறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
அகமதாபாத், மலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 190-க்கும் மேற்பட்டடீர் பலியாயினர். இதன் எதிரொலியாக நாட்டின் முக்கியப் பொறுப்புகளிலும் பதவிகளிலும் பல்வேறு உடனடி மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உளவுத்துறையின் செயல்பாடுகளும் மிக மிக அதிருப்தி அளிப்பதாகவுள்ளதால், அந்தத் துறையில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களை நீக்கி விட்டு, அனுபவமும் திறமையும் வாய்ந்தவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply