தேர்தல் விதிமுறைகளை மீறி எதிர்க்கட்சி ஊடக மாநாடுகள்
தேர்தல் ஆணையாளரின் 33 ஆம் இலக்க அறிக்கையின்படி நேற்று முன்தினம் (23 ஆம் திகதி) நள்ளிரவுக்கு பின் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டமும் நடத்த முடியாது. நடத்தினால் அது தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறுவதாக அமையும்.
அவ்வாறான நிலையில் நாட்டின் தேர்தல் சட்டத்தை மதிக்காமல் மக்கள் விடுதலை முன்னணி நேற்று 24ம் திகதி காலை பத்தரமுல்லையில் எதிரணி ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவர்களது கொழும்பு காரியாலயத்திலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கம்பஹா ஹொரகொல்லையில் உள்ள அவரது வீட்டிலும், மங்கள சமரவீர கொழும்பிலுள்ள அவரது காரியாலயத்திலும் நான்கு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தியுள்ளனர்.
நாட்டில் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் இவர்கள் அனைவரும் மேற்கொண்ட இந்த செயற்பாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வன்மையாக கணடிப்பதுடன், பலத்த எதிர்ப்பும் தெரிவிப்பதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கைச்சாத்திட்டு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply