தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்க அரசு யோசனை

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இலங்கையில் தற்போது வருடாந்தம் சுமார் 20,000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதிக எண்ணிக்கையானோர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப் பெற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாத நிலையுள்ளது. அதேநேரம், வருடாந்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடரச் செல்வதால் இலங்கையிலிருந்து பல நூறு கோடி ரூபாக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களும் இடதுசாரிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருவதால், இவ்வாறான யோசனையை அரசு இதுவரை அமுல்படுத்தவில்லை.

எனினும் உயர்கல்வியை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் மிகப் பெருந்தொகை பணத்தை செலவிட்டு வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்கும் நோக்கில் தற்போது இங்கும் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க முன்வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply