ஜனாதிபதிக்கு இந்திய ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் வாழ்த்து: இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் உரையாடல்
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையில் இலங்கை அனைத்து துறைகளிலும் முன்னேறும் என்றும், நாட்டில் பூரண அமைதி நிலவும் என்றும் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு, அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக தொலைபேசி மூலம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply