சீனப் பொருளாதாரம் உயர்வு

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக அமைந்துள்ளது. உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி. டி. பி.) தற்போது அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டாமிடத்திலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி சீனா அதிவேகமாக இரண்டாமிடத்தை நோக்கி வளர்ந்து வருகிறது.

அந்நாட்டின் “தேசிய புள்ளியியல் பீரோ” அமைப்பின் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டின் சில்லறை வர்த்தகம் 15.5 சத வீதமாகவும், ஊரக நிரந்தர சொத்து முதலீடு 30.5 சதவீதமாகவும், தொழிலக உற்பத்தி 11 சதவீதமாகவும், வீட்டு அடமானக் கடன் 48 சதவீதமாகவும், 2009 ன் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளன.

மேலும், 2009 ன் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.2 சத வீதம், இரண்டாவது காலாண்டில் 7.9 சதவீதம் மூன்றாவது காலாண்டில் 9.1 சதவீதம், நான்காவது காலாண்டில் 10.7 சத வீதம் எனப் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி. டி. பி.) 245.5 லட்சம் கோடி ரூபா (அமெரிக்க டாலர் மதிப்பில் 4.91 ட்ரில்லியன்) இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஜி. டி. பி. 2009 இல் 233 லட்சம் கோடி ரூபா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பொருளாதார வளர்ச்சி 5.4 சத வீதம். இந் நிலையில், உலகப் பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள “உலகப் பொருளாதார அறிக்கை 2010 இல், உலகளாவிய நிலையில் பொருளாதார வளர்ச்சி 2009 இல் 2.2 சதவீதமாக உள்ளது.

2010 இல் இது 2.7 சதவீதமாகவும், 2011 இல் 3.2 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும். பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் இருந்தாலும், நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார மீட்சி மிகக் குறைந்த வேகத்தில் தான் இருக்கிறது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply