செம்மொழி மாநாட்டுக்காக கலைஞர் எழுதிய பாடலுக்கு ரகுமான் இசை
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி பிரத்யேகமாக ஒரு பாடல் இயற்றியுள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அந்த பாடலுக்கு இசை அமைக்கிறார்.
கோவையில் வரும் ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பின்னர் உலகத் தமிழர்கள் பங்கேற்கும் முதலாவது மாநாடு என்பதால், இந்த மாநாட்டுக்காகவே பிரத்யேகமாக ஒரு பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் முதல்வரின் பாடலுக்கு முதல் முறையாக இசை அமைக்கிறார்.
இது தொடர்பாக நேற்று அவர் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கிராமி விருதுக்கான பரிசீலனை பட்டியலில் தனது பெயர் உள்ளது என்றும் இதற்காக இரவு லாஸ் ஏஞ்சலஸ் செல்ல இருப்பதாகவும் முதல்வரிடம் ரகுமான் தெரிவித்தார். ரகுமான் கிராமிய விருது பெற முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply